+ 91 9840 347 697

aloe vera ayurveda

Aloe Vera Benefits (சோற்றுக் கற்றாழை)

Aloe Vera Benefits (சோற்றுக் கற்றாழை)

1. சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும்.

2. சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.

vestige-aloe-vera-price-best3. சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் (ஸ்ட்ரெஸ்) தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.

4. சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

5. 100கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்து கொண்டு அத்தோடு 10கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும் சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.

6. சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாக சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.

7. கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.

8. சோற்றுக் கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால்ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

9.. சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.

10. சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டு சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.

11. சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுனஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.

12. சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

13. இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.

14. சோற்றுக் கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் பேகொசைட்டோஸிஸ் மற்றும் ஆண்டிபாடீஸ் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

You can get the Natural Ayurveda Aloe Vera extracted capsules at this website Click here for more details.